ஆபாச சி.டி வழக்கில் நீதிமன்றம் சென்ற அமைச்சர்களால் எப்படி மாநிலம் வளர்ச்சி பெறும்: எம்எல்ஏ சாரா மகேஷ் தகவல்

மைசூரு: மானத்தை காப்பாற்றிக்கொள்ள நீதிமன்றத்திற்கு செல்லும் அமைச்சர்களால் எப்படி மாநில வளர்ச்சி பணிகளை செய்ய முடியும் என்று  எம்.எல்.ஏ சா.ரா. மகேஷ் தெரிவித்தார். மைசூருவில் ேநற்று செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ சா.ரா. மகேஷ் கூறுகையில், அமைச்சர்கள் இரண்டு முறை பதவி உறுதி மொழி எடுத்து  கொள்கின்றனர். தங்கள் மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். இவர்களால் எப்படி மாநில வளர்ச்சி பணிகளில் கவனம்  செலுத்த முடியும். இதுேபான்றவர்கள் மாநிலத்தில் உள்ள ஆறரை கோடி மக்களை எப்படி காப்பாற்ற போகிறார்கள்.மஜத மற்றும் எச்.டி.குமாரசாமியை  பற்றி அமைச்சர் ஜமீர் அகமதுகான் விமர்ச்சிக்கிறார்.

எங்கள் கட்சியினர் வேறு கட்சி தலைவர்களை பற்றி விமர்சிப்பது இல்லை. கட்சியில் இருந்து  அதிகாரத்தை அனுபவித்து விட்டு இந்திரன் சந்திரன் என்று கட்சியை விட்டு சென்றவர்களே எங்கள் கட்சியினர் பற்றி விமர்சனம் செய்கிறார்கள்.  தேவகவுடா, எச்.டி.குமாரசாமி, ரேவண்ணா ஆகியோர்களுக்கு விமர்சனத்தை தாங்கி கொள்ளும் சக்தி உள்ளது.மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து ெதாழிலாளர்கள் பிரச்சனையை அரசு முடிவுக்கு கொண்டுவரவேண்டும். அடிக்கடி இதுபோல்  போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், போராட்டம் என்று ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதனால்  போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு முன்வரவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: