அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்த மாஜி ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: போலீசில் புகார்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு அடுத்த ஆய்மூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(50). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவர், தற்போது கூட்டுறவு சங்க தலைவராக உள்ளார். அதிமுகவில்  இருந்தபோது அமைச்சர் ஓ.எஸ்.மணியனுடன் நெருக்கமாக இருந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் அறிவழகன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆய்மூரில் அறிவழகனின் உறவினர்  வேதலிங்கம் என்பவர் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அறிவழகனை தகாத வார்த்தையில் திட்டியதோடு நன்றி கெட்டவனே என கூறியுள்ளார்.

மேலும் அறிவழகன் இடதுமார்பில் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் தோனியில் ‘‘உன் உயிர் என் கையில்’’ தான் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் நிலைதடுமாறி கீழே  விழுந்து கிடந்த அறிவழகனை உறவினர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக தலைஞாயிறு போலீசில் அறிவழகன் புகார் கொடுத்தார்.

Related Stories: