நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு

ஒடிசா: நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு செய்துள்ளது. பி.ஜே.டி. எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்திய நவீன் பட்நாயக், இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என அதிரடியாக அறிவித்துள்ளார். பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்றும் ஒடிசா மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை உரிய முறையில் நாடாளுமன்றத்தில் எழுப்பவும் எம்.பி.க்களுக்கு நவீன் பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார். ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவும் பிஜு ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளது.

The post நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு appeared first on Dinakaran.

Related Stories: