உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுபோட வந்த முதியவரை மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வைத்து முறைகேடு: தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர் புகார்

ஜெயங்கொண்டம்:  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கடந்த 6ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலின்போது 65வயதான முதியவர் ஒருவர், உதயசூரியன் சின்னம் எங்கே என  வாக்குசாவடி மையத்தில் இருந்த நபர் ஒருவரிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த நபர், மாம்பழம் சின்னம் தான் உதயசூரியன் என முதியவரிடம் வாக்கினை பதிவு செய்யும்படியும், அதனை வீடியோவும் எடுத்து சமூக வலைதளங்களில் அந்த  நபர் பரவ விட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட கலெக்டர் ரத்னா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  உடையார்பாளையம் ஆர்டிஓ அமர்நாத் ஆகியோரிடம் புகார் மனு ஒன்றை திமுக வேட்பாளர் கண்ணன் நேற்று அளித்துள்ளார்.

இந்த புகார் மனுவில், தேர்தல் விதிமுறையின்படி வாக்களிக்கும் நபரை தவிர மூன்றாவது நபர் ஒருவர் உள்ளே செல்லுதல் தவறு. உள்ளே சென்று வாக்களிக்கும் இடத்தில் வீடியோ எடுத்து வெளியிட்டது தவறு. இதை அனுமதித்த தேர்தல்  வாக்குச்சாவடி அலுவலர்கள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

Related Stories: