சென்னை பல்கலை துணைவேந்தர் மசோதா விவகாரம் ஜனாதிபதி முர்முவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த சென்னை பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை குடியரசு தலைவர், தற்போது தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படவில்லை என்பதே இதற்கு காரணம். இது ஒன்றிய பாஜ அரசின் பாசிச இந்துத்துவா அரசியல் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க வேண்டும் என்ற தனது அரசியல் உள்நோக்கத்தை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்பதற்காகவே, சென்னை பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒன்றிய அரசு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தரவில்லை. தற்பொழுது அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கல்வியில் மாநில உரிமைகளை பறிக்கும் ஒன்றிய பாஜ அரசின் இச்செயலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கூறி உள்ளார்.

Related Stories: