சமூக வலைதளத்தில் வீடியோ வைரல் விஜயபாஸ்கருக்கு ஓட்டு போட வேண்டாம்: கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் மறைந்த டாக்டரின் மனைவி

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்தது. இதன்படி, தருமபுரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் மாற்றப்பட்டார். இந்நிலையில் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் கடந்த பிப்ரவரி மாதம் மரணம் அடைந்தார். பணியிடமாற்றத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக தான் லட்சுமி நரசிம்மன் மரணம் அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் விஜயபாஸ்கருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று மறைந்த மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மனைவி கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: எனது கணவர் இருக்கும் விராலிமலை தொகுதியில் அப்போது உள்ளாட்சி தேர்தல் நடந்து கொண்டு இருந்தது. விஜயபாஸ்கரின் பின்னாடியே அலைந்தார் எனது கணவர். பெண் மருத்துவர்களை ஏன் டிரான்ஸ்பர் பண்றீங்க, அவர்களை ஏன் டார்கெட் பண்றீங்க, என்னை டார்க்கெட் பண்ணுங்க, என்னை சஸ்பெண்ட் பண்ணுங்க, என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க. பெண் மருத்துவர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்பதுதான் அவரின் கோரிக்கையாகவே இருந்தது. ஆனால் கல் நெஞ்சகாரன் விஜயபாஸ்கர் அதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை.

அதிகாரம் மற்றும் ஆணவத்தில் எடப்பாடி மற்றும் விஜயபாஸ்கர் சேர்ந்து பண்ணின அட்டூழியத்தால் எனது கணவர் மரணம் அடைந்தார். அந்த இழப்பில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை. உங்க ஓட்டை பார்த்து போடுங்க. விஜயபாஸ்கருக்கு போட வேண்டாம். அவர் திரும்ப வந்தா எங்கள் குடும்பம் நடுத்தெடுவுக்கு போய்விடும். நிர்கதியா போய்விடும். எனது கணவர் அடக்கம் செஞ்ச இடத்திற்கு கூட விடமாட்றாங்க. உங்களுக்கு மனசாட்சினு ஒண்ணு இருக்கு. மன்றாடி கேட்கிறேன். பார்த்து ஓட்டு போடுங்க. இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories: