சபாநாயகர் போட்டியிடும் தொகுதியில் அதிமுக பிரசார வாகனத்தில் திமுக பிரசார பாடல்

அவினாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பசூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் சபாநாயகர் தனபாலின் பிரசார வாகனத்தில் ஒலிபெருக்கி பாடியபடி சென்று கொண்டிருந்தது. பசூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பிரசார வாகன ஓட்டுநரும், உதவியாளரும் வாகனத்தை நிறுத்திவிட்டு, அதிமுக பிரசார பாடலை பாடவிட்டு தேனீர் அருந்த சென்றனர். சிறிது நேரத்திற்குள் அதிமுக பாடல் முடிந்ததும், தானாகவே திமுக பிரசார பாடலான ‘ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறாரு...’ என்ற பாடல் ஒலிக்கத் துவங்கி விட்டது. இதைக்கேட்ட அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்திற்குள்ளாகினர். பாடலை கேட்ட வாகன ஓட்டுநர் டீக்கடையிலிருந்து ஓடிச்சென்று பாடலை நிறுத்திவிட்டு, அங்கிருந்து பிரசார வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார். அதிமுக வாகனத்தில் திமுக பாடல் ஒலித்ததால், அதிமுகவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: