ரங்கநாதசாமி கோவில் விழாவிற்கு பக்தர்கள் வருகையை தடுக்க போக்குவரத்து ரத்து: கலெக்டர் எம்.ஆர்.ரவி உத்தரவு

சாம்ராஜ்நகர்: பிலிகிரிரங்கனபெட்டாவில் உள்ள ரங்கநாதசாமி கோயிலில் நடைபெற்று வரும் விழாவிற்கு பக்தர்கள் வருவதை தடுக்க பேருந்து சேவையை நிறுத்தி மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி உத்தரவிட்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா பிலிகிரிரங்கனபெட்டாவில் புகழ்பெற்ற ரங்கநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து சில தினங்களுக்கு முன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து தினந்தோறும் சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டு நாளை மூல விக்ரகத்திற்கு கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது. இதையடுத்து இந்த கோவிலில் தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்களை கட்டுப்படுத்த பிலிகிரிரங்கனபெட்டாவிற்கு செல்லும் அரசு ேபருந்து சேவை நிறுத்தப்படுவதாக மாவட்ட கலெக்டர் எம்.ஆர். ரவி உத்தரவிட்டார்.  ேபருந்து சேவை நிறுத்தத்திற்கு அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  பேருந்து சேவையை முற்றிலும் நிறுத்திவிட்டால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும் மிகவும் சிரமம் ஏற்படும் என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்

படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Related Stories: