70 ஆண்டுகளுக்கு பின் கர்நாடகாவில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

பெங்களூரு:கர்நாடகாவில் 70 ஆண்டுகளுக்கு பின் மார்ச் மாதம் ேகாடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. பொதுவாக ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் கோடை வெயில் தொடங்கும். ஆனால் இவ்வாண்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்திலேயே கோடைவெயில் தொடங்கி விட்டது. தற்போது மாநிலத்தின் பல மாவட்டங்களில் 30 முதல் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவுகிறது. பெல்தங்கடி தாலுகாவில் தற்போது 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை 36 முதல் 38 டிகிரி செல்ஷியசாக உள்ளது. வடகர்நாடகம், மத்திய கர்நாடகம், கல்யாண-கர்நாடகா பகுதியிலும் கடுமையான வெயில் வாட்டுகிறது.

 கடந்த 1950ம் ஆண்டு இதே மார்ச் மாதம் கோடை வெயில் 38.05 டிகிரி செல்சியசாக இருந்தது. அதன்பின் 1964, 1973 ஆகிய ஆண்டுகளிலும் மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் இருந்தது. கடந்த 70 ஆண்டுகளுக்கு பின் தற்போது மார்ச் மாதம் வெயிலின் தாக்கம் 38 டிகிரி செல்சியசை தொட்டுள்ளது. இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி கூறுகையில், ``பெங்களூருவில் மார்ச் மாதத்தில் வழக்கமாக சராசரி வெப்ப அளவு 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் தான் இருக்கும். இவ்வாண்டு 2 டிகிரி கூடுதலாக 36 டிகிரி செல்சியஸ் வெயில் வாட்டியது.   

தற்போது எதிர்பார்ப்பை காட்டிலும் அதிகமாக இருக்கும். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இரண்டொரு நாளில் உருவாகுவதின் காரணமாக பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இரண்டொரு நாளில் கோடை மழை பெய்யவும் வாய்ப்புள்ளது’’ என்றார்.

Related Stories: