திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பூக்குழி திருவிழா நடைபெறும். இந்தாண்டு பங்குனி திருவிழா பூக்குழி திருவிழா ஏப்.11ல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மேளதாளம் முழங்க 4 ரத வீதிகள் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு கொடி பட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் கோயில கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தையடுத்து ஏராளமான பக்தர்கள் இன்று முதல் விரதத்தை துவக்கினர். விழாவில் கோவில் தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி கலாராணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கோயில் அமைந்துள்ள பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகர் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: