லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம்: கேரளாவில் பாஜ வாக்குறுதி

திருவனந்தபுரம்: ‘கேரளாவில் ஆட்சிக்கு வந்தால் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்,’ என்று பாஜ.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜ.வின் தேர்தல் அறிக்கையை  திருவனந்தபுரத்தில் மத்திய செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் நேற்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* சபரிமலை கோயில் ஆச்சாரத்தை பாதுகாக்க புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.

* முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக ஓய்வூதியம் 3,500 ஆக உயர்த்தப்படும்.

* குடும்பத்தில் ஒருவருக்கு வேலை உறுதி செய்யப்படும்.

* மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும்.

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.

* அனைத்து தொழில்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

* கோயில்களை நிர்வகிக்க அரசியல் பேதமின்றி அமைப்பு ஏற்படுத்தப்படும்.

* நிலம் இல்லாத பட்டியல் இனத்தவர்களுக்கு விவசாயம் செய்ய நிலம் வழங்கப்படும்.

* திருமணத்துக்காக கட்டாய மத மாற்றம் (லவ் ஜிகாத்) செய்யப்படுவதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்படும்.

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் வருமானம் ஈட்டுபவர் நோய்வாய்பட்டால் மாதம் 5 ஆயிரம் வழங்கப்படும்.

Related Stories: