தேனி அருகே முத்துதேவன்பட்டி கிராமத்தில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் கட்-போடி தொகுதியில் அவலம்

தேனி : போடி தொகுதியில் உள்ள முத்துதேவன்பட்டி கிராமத்தில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதியில் வீரபாண்டி பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சிக்குட்பட்ட முத்துத்தேவன்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல்வேறு சமூக மக்கள் வசிக்கும் இக்கிராமத்திற்கு கடந்த ஒரு வாரகாலமாக குடிநீர் சப்ளை இல்லை.

இதனால், இக்கிராம மக்கள் குடிநீருக்காக பழனிசெட்டிபட்டி, முல்லைப்பெரியாற்றுக்கு சென்று தண்ணீர் பிடித்து வரும் அவலம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இக்கிராம மக்களுக்கு உடனடியாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: