ஆர்எஸ்எஸ் பொது செயலாளராக தத்தாத்ரேய ஹொசபெலே தேர்வு

பெங்களூரு: மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளரை தேர்வு செய்ய மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரதிய பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த 2 நாள் கூட்டம் பெங்களூருவில் நேற்று முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், கடந்த 2009ம் ஆண்டு முதல் கூடுதல் பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்த தத்தாத்ரேயா ஹொசபெலே தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய பொதுச் செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து ஹொசபெலே தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

1968ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்.சில் தன்னை இணைத்து கொண்ட ஹொசபெலே, 1972ல் அதன் மாணவர் அமைப்பில் சேர்ந்தார். அவர் இந்த அமைப்பின் பொது செயலாளராக 15 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். நாட்டில் அவசர நிலை பிரகனடபடுத்திய போது, ஹொசபெலே மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜ மூத்த தலைவர்களுடன் நல்ல நட்புறவு கொண்டிருக்கும் ஹொசபெலே, எச்வி. ஷேஷாத்திரிக்கு பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பின் 2வது அதிகாரமிக்க பதவிக்கு தேர்வான கர்நாடகத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Related Stories: