இணையதள சேவையை வழங்குவதில் ஏகாதிபத்திய போக்கை அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவிசங்கர் தகவல்

புதுடெல்லி: ‘இணையதளத்தில் ஏகாதிபத்தியத்தை உருவாக்கும் எந்தவொரு முயற்சியையும் அரசு ஏற்றுக் கொள்ளாது,’ என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.மாநிலங்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜி.சி. சந்திரசேகர், சமூக வலைளதள கணக்குகள் முடக்கப்படுவது குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அளித்த பதில் வருமாறு: இந்தியாவில் ஏறக்குறைய 140 கோடி பேர் லிங்க்டுஇன், வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர்.

இணையதளம் மனித அறிவின் சக்தி வாய்ந்த கண்டுபிடிப்பு. ஆனால், இதில் ஒரு சில நிறுவனங்கள் ஏகாதிபத்தியத்தை உருவாக்கி கோலோச்ச நினைக்கின்றன. இத்தகைய முயற்சிகளை அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. கருத்து வேறுபாடுகளை அரசு வரவேற்கிறது. அதே நேரம், இணையதளத்தை தவறாகவோ அல்லது தவறான நோக்குடனோ பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்று இந்திய நீதித்துறை சேவை

அமைச்சர் ரவிசங்கர் மேலும் கூறுகையில், ``ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற இந்திய சேவைத்துறை போன்று, அனைத்து இந்தியா நீதித்துறை சேவையும் இன்றியமையாதது. ஏனெனில், தகுதி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான, தகுதி வாய்ந்த, சட்டத் திறமை கொண்ட இளைஞர்கள் பணியில் சேர்வதற்கு, நீதித்துறை சேவை வாய்ப்பளிக்கிறது. இதன் மூலம், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களின் பிரதிநிதித்துவத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,’’ என்றார்.

Related Stories: