காலிங்பெல் அடிச்சால் காஸ் வந்து நிக்கும்... காசு கொடுத்திடாதீங்க...!: காமெடியா பேசுறாரு உதயகுமாரு

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உதயகுமார். சாதாரணமாகவே, இவரது பேச்சில் பில்டப் ஓவராக இருக்கும். இப்போது தேர்தல் காலம். சும்மாவா இருப்பார்? தேர்தல் பிரசாரங்களில் சும்மா இஷ்டத்துக்கு அடித்து விடுகிறாராம். கேட்கும் மக்கள்தான் தலையைப் பிடித்துக் கொண்டு ‘‘உஷ்ஷ்... அப்பாடா. ஏற்கனவே வெயில் கொடுமை... இதுல, இது வேறயா’’ என்று புலம்புகிறார்களாம். தொகுதியி–்ல உள்ள சிவரக்கோட்டை, எஸ்பி நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரத்தின் போது, ‘‘அதிமுக வெற்றி பெற்றால், உங்களது வீட்டில் காலிங்பெல் அடிக்கும். நீங்கள் கதவை திறந்து பார்த்தால் உங்களுக்கு வாஷிங் மெஷின் கொடுக்க நாங்கள் வந்திருப்போம். சிறிது நேரத்தில் மீண்டும் பெல் அடிக்கும்.

கதவை திறந்தால் சிலிண்டர் கொண்டு வருபவர் வாசலில் நிற்பார். வழக்கம் போல் அவரிடம் பணம் கொடுத்துவிடாதீர்கள். ஆண்டிற்கு 6 காஸ் சிலிண்டர்கள் வரையில் அரசு இலவசமாக வழங்கியுள்ளது. அதனால் இலவச சிலிண்டரை பெற்று கொள்ளுங்கள்...’’ என்று போட்டுத் தாக்கினாராம். ‘‘ஓட்டுக்காக வேண்டி அமைச்சரு எல்லாத்தையும் அரசாங்கம் இலவசமாத் தர்றதா சொல்றாரே? இதுக்கெல்லாம் காசு எங்கேயிருந்து வரும்? கைக்காசு போட்டுத் தருவாரோ?’’ என மக்களில் சிலரிடம் முணுமுணுப்பும், பலரிடம் சிரிப்பலையும் எழுந்ததாம்.

Related Stories: