கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி

கோவை: கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்துகொண்டார். கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இங்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சகார்தர் (34) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காலை விமான நிலையத்தில் பணியில் இருந்தபோது குளியலறையில் திடீரென்று ஏகே 47 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இதில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. தற்கொலை செய்த சகார்தர் 16-6-2022 முதல் கோவையில் பணிபுரிந்தார். விமான நிலையம் அருகில் உள்ள பூங்கா நகரில் வசித்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தால் போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post கோவை விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் விரக்தி appeared first on Dinakaran.

Related Stories: