மக்களவை தேர்தல்: தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி அபார வெற்றி

தருமபுரி: தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி 3,21,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைப்பெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

அந்த வகையில், தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றி பெற்றுள்ளார். தருமபுரி தொகுதியில் இன்று காலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி முன்னிலை வகித்தார். இதை தொடர்ந்து திமுக வேட்பாளர் மணிக்கும், சவுமியா அன்புமணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் பிற்பகல் முதல் திமுக வேட்பாளர் மணி முன்னிலை வகித்து வருகிறார். தற்போது தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் மணி 3,21,493 வாக்குகள் பெற்று பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை வீழ்த்தி வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் அன்புமணி தோல்வியுற்ற நிலையில் இந்த தேர்தலில் அவரது மனைவி சவுமியா தோல்வி அடைந்தார்.

The post மக்களவை தேர்தல்: தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.மணி அபார வெற்றி appeared first on Dinakaran.

Related Stories: