மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின தமிழ்நாடு மாணவர்கள் 7 பேர் 100% மதிப்பெண் பெற்று சாதனை

சென்னை: கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 67 பேர் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களில் தமிழ்நாட்ைட சேர்ந்த மாணவ, மாணவியர் 7 பேர் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் பங்கேற்றனர். 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களில் ஓபிசியின் கீழ் 6 லட்சத்து 18 ஆயிரத்து 890 பேர், எஸ்சி பிரிவில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 738, எஸ்டி பிரிவில் 68 ஆயிரத்து 479, பொதுப்பிரிவின் கீழ் 3 லட்சத்து 33 ஆயிரத்து 932, பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவின் கீழ் 1 லட்சத்து 16 ஆயிரத்து 229 பேரும் தகுதி பெற்றுள்ளனர். மாற்றுத் திறன் கொண்டவர்கள் 4120 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
* நீட் தேர்வில் இந்தியர்கள் 23 லட்சத்து 30 ஆயிரத்து 225 பேர் பங்கேற்றதில் 13 லட்சத்து 14 ஆயிரத்து 160 பேர் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 1122 பேர் எழுதியதில் 694 பேரும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் 1214 பேர் எழுதியதில் 798 பேரும், ஓசிஐயை சேர்ந்தவர்கள் 736 பேர் எழுதியதில் 616 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.
* இந்த தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரத்து 449 பேர் பதிவு செய்ததில், 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தேர்வில் பங்கேற்று 89 ஆயிரத்து 426 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
* நீட் தேர்வில் 20 பெண்கள் டாப்பர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி சைலஜா, ஜெயதிபூர்வஜா, ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
* மாணவர்களுக்கான டாப்பர் லிஸ்டில் 20 பேர் உள்ளனர். அவர்களில் சையத் ஆரிபின்யூசுப், ஆதித்ய குமார் பாண்டா, ஸ்ரீராம் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
* நீட் தேர்வில் 99.997129 சதவீதம் மதிப்பெண்கள் 67 பேர் பெற்றுள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
* இடஒதுக்கீடு இல்லாத பிரிவின் கீழ் 10 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சையத்ஆரிபின் யூசுப், மாணவி சைலஜா இடம் பெற்றுள்ளனர்.
* ஓபிசி டாப்பர் லிஸ்டில் 10 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் மாணவர் ஸ்ரீராம் உள்ளார்.
* எஸ்சி பிரிவில் 10 பேர் டாப்பர் லிஸ்டில் உள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ரஜினீஷ் இரண்டாம் இடத்தில் உ்ள்ளார்.
* மாநில அளவிலான டாப்பர் லிஸ்டில் தமிழ்நாட்டை சேர்ந்த சையத் ஆரிபின் யூசுப், சைலஜா, ஆதித்யகுமார் பாண்டா, ஸ்ரீராம், ரஜினீஷ், ஜெயதிபூர்வஜா, ரோகித், சபரீசன், ஆகியோரும் இடம் பெற்று்ள்ளனர்.

மதிப்பெண் சதவீத அடிப்படையில் பெற்றவர்கள்
பிரிவு தகுதிபெற்றோர் மதிப்பெண் அளவு மொத்தம்
ஒதுக்கீடு அல்லாத/ பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் 50வது பர்சனை்டைல் 720-164 1165904
ஓபிசி 40வது பர்சனைடைல் 163-129 100769
எஸ்சி ,, ,, 34326
எஸ்டி ,, ,, 14478
இடஒதுக்கீடு அல்லாதோர்/
பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்/மாற்றுத்திறனாளிகள் 45வது பர்சனை்டைல் 163-146 455
ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் 40வது பர்சனை்டைல் 145-129 270
எஸ்சி,மாற்றுத்திறனாளிகள் ,, ,, 55
எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் ,, ,, 11

The post மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின தமிழ்நாடு மாணவர்கள் 7 பேர் 100% மதிப்பெண் பெற்று சாதனை appeared first on Dinakaran.

Related Stories: