மத்திய அரசு சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்பூசி வாங்க ஆர்டர்

டெல்லி: சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்பு ஊசியை வாங்க மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் இந்தியாவில் சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை மத்திய அரசு வாங்கி வருகிறது .

இந்த இரு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படும் தடுப்பூசிகளை இந்திய முழுவதும் மத்திய அரசு அனுப்பி மக்களுக்கு செலுத்திவருகிறது. இந்தநிலையில் நேற்றைய நிலவரப்படி இந்திய முழுவதும் உள்ள மூன்றரைக் கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் நாளுக்கு நாள் தடுப்பூசி கொட்டுக்கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.   

இதனால் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் 10 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகளைக் வாங்க மத்திய அரசு முடிவு செய்து அதற்க்கு ஆர்டர் கொடுத்துள்ளது. ஒரு முறை செலுத்தும் தடுப்பூசி விலை ரூ.157.50 காசுகள் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: