கனிம வளத்தை பாதுகாக்க அமைச்சகம் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை அறிவிப்பால் கட்டுமானத்துக்கு மணல் தட்டுப்பாடின்றி கிடைக்கும்: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் வரவேற்பு

சென்னை: கனிமவளத்தை பாதுகாக்க அமைச்சகம் என்ற  திமுகவின் தேர்தல் அறிக்க அறிவித்துள்ளது. இதன் மூலம் கட்டுமானத்துக்கு மணல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆர்.முனிரத்தினம் கூறியதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள பல்வேறு கனிமவளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும், பயன்பாட்டை முறைப்படுத்தவும், முறை கேடுகளால் கொள்ளை போவதை தடுக்கவும், அரசுக்கு உரிய வருவாயை ஈட்டவும், தனியாக ஒரு புதிய கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்துள்ளார். மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பை வரவேற்கிறோம். மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பால் மணல் தட்டுப்பாடின்றி எந்த இடையூறின்றி கிடைக்கும். அது மட்டுமல்லாமல் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் உள்ள அனைத்து லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: