அறிமுக கூட்டமே களேபரம் என் பெயரை ஏன் சொல்லல... கமல் கட்சி கூட்டத்தில் அடிதடி: ‘மய்யமாக’ நின்று நய்யப் புடைத்த தொண்டர்கள்

திண்டுக்கல் மாவட்டம், பழநி தொகுதி மக்கள் நீதி மைய வேட்பாளராக முன்னாள்  எம்எல்ஏ பூவேந்தன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று வேட்பாளர் அறிமுகக்கூட்டம்  நடந்தது. தேர்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு ஊர்களில் இருந்து சரக்கு  ஆட்டோக்களில், பெண்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். அறிமுகக் கூட்டத்தில்  மாவட்ட செயலாளரான ஆயை ஜப்பார் பேசியபோது, ஒன்றிய செயலாளரான  தமிழ்மணியின் பெயரை குறிப்பிடவில்லை என கூறப்படுகிறது. இதனால்  ஆத்திரமடைந்த தமிழ்மணியின் ஆதரவாளர்கள் கடும் கூச்சலில் ஈடுபட்டனர்.  அப்போது மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய செயலாளரின்  ஆதரவாளர்களிடையே ரகளை ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்  கொண்டனர்.  திடீர் ரகளையால் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த பெண்கள்  மற்றும் முதியவர்கள் பீதிக்குள்ளாகினர். திருமண மண்டபத்திற்குள் அங்குமிங்கும்  அலறியடித்தபடி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: