நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் தள்ளுபடி, இலவச டேப்லெட் .. மாணவர்களை குளிர்வித்த திமுகவின் கல்வி வளர்ச்சிக்கான அறிவிப்புகள்!!

சென்னை :  தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

கல்விக்காகவும், மாணவர்கள் நலனுக்காகவும் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் வருமாறு :

1.மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2. மருத்துவக் கல்லூரி இடங்கள் அமைத்தும் மாநிலத் தொகுப்புக்கே கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

3. ஐந்து ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

4. மத்திய அரசு பள்ளிகள் உள்பட தமிழகப் பள்ளிகள் அனைத்திலும் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் ஆக்கிட சட்டம் கொண்டு வரப்படும்.

5. பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து உணவாக பால் வழங்கப்படும்.

6. 30 வயதுக்கு உட்பட்ட தமிழகக் கல்லூரி மாணவர்களின் கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

7.அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும். கல்வி நிறுவனங்களில் வை ஃபைவ் வசதி செய்து தரப்படும்.

Related Stories: