2021 தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு: 5 தொகுதியில் பாஜகவுடன் நேரடி மோதல்.!!!

சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சியினர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்ற தொகுதியும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 25 தொகுதிகளின் பட்டியலை தமிழக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார்.

25 தொகுதி பட்டியல்:

1. (02)பொன்னேரி

2. ஸ்ரீபெரும்புதூர்( தனி)

3. சோளிங்கர்

4. ஊத்தங்கரை (தனி)

5. ஓமலூர்

6. உதகமண்டலம்

7. கோவை (தெற்கு)

8. காரைக்குடி

9. மேலூர்

10.சிவகாசி,

11. ஸ்ரீவைகுண்டம்

12. குளச்சல்

14. விளவங்கோடு

13., கிள்ளியூர்

15. ஈரோடு கிழக்கு

 

16. தென்காசி

17. நாங்குநேரி

18. அறந்தாங்கி

19. விருத்தாசலம்

20. கள்ளக்குறிச்சி

21.ஸ்ரீவில்லிப்புத்தூர்

22. திருவாடானை

23.உடுமலைப்பேட்டை

24. மயிலாடுதுறை

25. வேளச்சேரி

இதில், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் குளச்சல், விளவங்கோடு, உதகை, காரைக்குடி, கோவை தெற்கு ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் நேரடியாக பாஜகவுடன் மோதுகிறது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும் பாஜகவுடன் காங்கிரஸ் நேரடியாக மோதுகிறது.

Related Stories: