பாஜ தலைவர்களுடன் நடிகர் அர்ஜூன் திடீர் சந்திப்பு: கட்சியில் சேர திட்டமா?

சென்னை: மத்திய உள்துறை இணை அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான கிஷண் ரெட்டி, பாஜ தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ தலைவர்களை சென்னையில் பிரபல நடிகர் அர்ஜூன் நேற்று திடீரென சந்தித்து பேசினார். அப்போது பாஜ துணை தலைவர் எம்.என்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர். இது குறித்து பாஜ வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘நடிகர் அர்ஜூன் பாஜ தலைவர்களை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்து பேசினார்’’ என்று கூறுகின்றனர். மேலும் கிஷண் ரெட்டி நடிகர் அர்ஜூனுக்கு நெருங்கிய நண்பர் என்பதால் பார்த்திருக்க கூடும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நடிகர் அர்ஜூன் பாஜ தலைவர்களை சந்தித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கட்சியில் சேர இருப்பதாகவும் வதந்தியும் பரவியுள்ளது.

Related Stories: