காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை பாஜக ஆட்சியில் மிகவும் குறைவு தான் : மத்திய அமைச்சர் பேச்சு

மதுரை : காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மிகவும் குறைவாக இருப்பதாக மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரை வந்துள்ள அவர், ராமர் ரதயாத்திரையை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.சிங், பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது என்று குறிப்பிட்டார். என்றாலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக வி.கே.சிங் கூறியுள்ளார்.

இதற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூழ்நிலைகள் மாறும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2011 -2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,240 ஆக இருந்தது. ஆனால் தற்போது வெறும் 700 ரூபாய் தான் என்றார். ராமர் கோவிலை கட்டுவதற்காக பெரியோர் முதல் சிறியோர் வரை இதயபூர்வமாக நிதி அளித்து வருவதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். ராமர் கோவில் நாட்டில் ராமராஜ்யத்தை கொண்டு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Related Stories:

>