எப்டிஏ தேர்வில் நடைபெற்ற முறைகேட்டுக்கு பணியாளர் தேர்வாணையமே காரணம்: வாயில் துணி கட்டி மாணவர் அமைப்பினர் போராட்டம்

கோலார்: மாநிலத்தில் நடந்து முடிந்த எப்டிஏ எழுத்து தேர்தல் முறைகேடு நடக்க கர்நாடக மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் மெத்தன போக்கு  தான் காரணம் என்று மக்கள் குற்றம்சாட்டினர். மாநில அரசு துறையில் காலியாக இருக்கும் எப்டிஏ பணியிடம் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த  ஜனவரி 24ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. தேர்வு நடப்பதற்கு முதல் நாள், வினாத்தாள் வெளியாகியதால், தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின் கடந்த 28ம் தேதி மீண்டும் எழுத்து தேர்வு நடந்தது. இதில் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இருந்த தேர்வு மையத்தில்  வினாத்தாள் வெளியாகியதாக தகவல் வந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கோலார் நகரில் மாணவர் அமைப்பினர், எப்டிஏ தேர்வு எழுதியவர்கள் வாயில் துணியை கட்டிக்கொண்டு  போராட்டம் நடத்தினர். எழுத்து தேர்வில் முறைகேடு நடக்க கர்நாடக மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மெத்தனம் மற்றும் அலட்சியம்  முக்கிய காரணம் என்று குற்றசாட்டியதுடன் வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வலியுறுத்தினர்.

Related Stories: