அடுத்தடுத்து 3 கோயில்கள் கொள்ளை

கூடுவாஞ்சேரி: வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு 1வது தெருவில் விநாயகர், சிவன் கோயிகள் உள்ளன. இதேபோல், 2வது தெருவில் கருமாரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில்களில் மாதந்தோறும் முதல் வாரத்தில் உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுத்து எண்ணுவது வழக்கம். இந்நிலையில், இந்த கோயில்களில் நேற்று அதிகாலையில் கோயில் பூசாரிகள் பூஜை செய்வதற்காக கோயில் கதவுகளை திறந்தனர். அப்போது, அங்கிருந்த உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபோல், 3 கோயில்களிலும் உள்ள உண்டியல்களை, மர்மநபர்கள் உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. உண்டியல்களில் சுமார் ₹30 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவலறிந்து ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து கோயில்களில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 3 கோயில்களில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>