கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இந்தியாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. நாடு முழுவதும் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப்  பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 60 வயது மேற்பட்டவர்களுக்கும், இணை நோயால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பீகார்  முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.

இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், தேசிய மாநாட்டு எம்.பி.பாரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது பெற்றோருடன் லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 52 வயதான அரவிந்த் கெஜ்ரிவால், நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>