சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டம்: பொதுமக்களிடம் டிடிஏ கருத்து கேட்பு

புதுடெல்லி: சென்ட்ரல் விஸ்டா மறு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பிரதமர் அலுவலகம் கட்டுவதற்காக பயன்படுத்தப்படக்கூடிய இரண்டு இடங்கள் உட்பட நான்கு நிலங்களின் பயன்பாட்டை மாற்ற டெல்லி மேம்பாட்டு ஆணையம்(டி.டி.ஏ) முன்மொழிந்துள்ளது.இதுதொடர்பாக பொதுமக்களின் பரிந்துரை மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க கோரியுள்ளது. டெல்லி மேம்பாட்டு ஆணையம் கடந்த வாரம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், மோதிலால் நேரு மார்க் மற்றும் கே கம்ராஜ் மார்க் (பிளாட் 38), மற்றும் டல்ஹெளசி சாலை மற்றும் டியு-டியு சாலை (பிளாட் 36) ஆகியவற்றுக்கு இடையில் அமைந்துள்ள தலா 9.5 ஏக்கர் கொண்ட நிலத்தின் பயன்பாட்டை மாற்ற டி.டி.ஏ முன்மொழிந்துள்ளது. இந்த இரண்டு பிளாட்டுகளிலும் புதிய பிரதமர் அலுவலகம் கட்டப்பட உள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகள், பரிந்துரைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும் டிடிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, டல்ஹெளசி சாலை மற்றும் தியாக்ராஜ் சாலை மற்றும் சந்திரவலில் 6.54 ஏக்கர் இடையே அமைந்துள்ள 12.8 ஏக்கர் நிலத்தின் நில பயன்பாட்டை முறையே சிவில் லைன்ஸ் அரசு அலுவலகம் மற்றும் குடியிருப்பு ஆகியவற்றிலிருந்து பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற டி.டி.ஏ முன்மொழிந்துள்ளது.

Related Stories: