உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி: சாப்ட்வேர் ஊழியர் கைது

வேளச்சேரி: தரமணி அசென்டாஸ் சாலையில் உலக வங்கி உள்ளது. இதில் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக சரத்சந்தர்(41), பணியாற்றி வருகிறார். இவர் உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றுவதாக தரமணி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜாபர்கான்பேட்டை எஸ்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த அந்தோணி(39) என்பவர் ஏமாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று அந்தோணியை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், அந்தோணி உலக வங்கி அருகில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், இவர் பலரிடம் உலக வங்கியில் வேலை செய்வதாக கூறி ஏமாற்றி அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றியதாகவும் தெரியவந்தது. மேலும், சமீபத்தில் தரமணியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி  நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றியதும் தெரியவந்தது. மேலும் இவர் மீது ஏற்கனவே பாலியல் பலாத்காரம் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

Related Stories:

>