சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து தப்பிக்க ஐடி நிறுவனங்களின் மையமாக டெல்லியை மாற்ற வேண்டும்: கவர்னர் அனில் பைஜால் ஆலோசனை

புதுடெல்லி,மார்ச் 4: சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து தப்பிக்க ஐடி நிறுவனங்களின் மையமாக டெல்லியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் அனில் பைஜால் தெரிவித்துள்ளார்.டெல்லி சிஐஐ ஆண்டு இறுதி மாநாட்டில் கவர்னர் அனில் பைஜால் கலந்து ெகாண்டு பேசினார். அப்போது டெல்லியை சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து காப்பாற்ற வசதியாக டெல்லி மாஸ்டர் பிளான் 2041 தயாரிக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களின் மையமாகவும், நிதி சேவைகள் மையமாகவும் மாற்றக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அதற்கு ஏற்றார் போல் சலுகைகளை வழங்கி, திட்டங்களை தயாரிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் டெல்லியில் அமைவதால் சுத்தமான இடமாக டெல்லியை எதிர்காலத்தில் மாற்ற முடியும்.

ஏனெனில் இது மாசு இல்லாத தொழில்நுட்பம் சார்ந்தது. மனித மூலதனத்தை மட்டுமே கொண்டு செயல்படுவது ஆகும். டெல்லியில் தற்போது 2.5 கோடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இதன் மூலம் கடந்த 70 வருடங்களாக வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி டெல்லி முன்னேறி வருகிறது. ஆனால் தற்போது வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு வான்வெளி கட்டுப்பாடு, சுற்றுப்புற மாசு, உள்ளிட்டவற்றில் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இதையெல்லாம் தவிர்க்கும் வகையில் டெல்லி மாஸ்டர் பிளான் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: