நெல்லை மாவட்டத்தில் நெல் அறுவடைப்பணி தீவிரம்: உளுந்து, வெள்ளரி பயிரிட ஆர்வம்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ெநல் அறுவடைப்பணி தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படுவதால் சில நிலங்களில் உளுந்து, வெள்ளரி பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இயல்பைவிட அதிகமாக பெய்து விவசாயிகளையும் பொதுமக்களையும் மகிழ்வித்தது. டிசம்பர் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவில் மழை  பதிவு ஏற்பட்டது. இதற்கு முன்னதாகவே மாவட்டம் முழுவதும் நெல்பயிர் சாகுபடி நடந்தது. தற்போது கதிர் முற்றிய நிலங்களில் நெல் அறுவடைப்பணி தொடங்கியுள்ளது. இதனால் நெல் அறுவை இயந்திரங்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைவிட ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 வரை  வாடகை உயர்ந்துள்ளது. டீசல் விலை உயர்வால் சில இடங்களில் ரூ.3 ஆயிரம் வரை கேட்பதாக விவசாயிகள் கூறினர். இதனிடையே தாமதமாக நெல் நடவு செய்த கடைமடை பகுதிகளுக்கு தொடர்ந்து கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி நெல் அறுவடை நடந்த வயல்களில் குறுகியகால சாகுபடியாக உளுந்து, வெள்ளரி போன்றவைகளை உடனடியாக பயிரிடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>