பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா உயிரியல் பூங்காவில் புலி சபாரி அறிமுகம்

பெலகாவி: பெலகாவியில் உள்ள ராணி சென்னம்மா உயிரியல் பூங்காவிற்கு புலி சபாரி அறிமுகப்படுத்தப்பட உள்ளது என பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெலகாவியில் ராணி சென்னம்மா மினி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு விலங்குகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. தற்போது பூங்கா நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியினர் எடுத்த நடவடிக்கையால் அது உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பன்னேருகட்டா உயிரியல் பூங்காவில் இருந்து 3 சிங்கங்கள் வரவழைக்கப்பட்டது. தற்போது அவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று 2 புலிகளும் வரவழைக்கப்பட உள்ளது. இந்நிலையில் கண்ணாடி குடுவையில் அடைப்பது போலில்லாமால் புலிகள் சபாரிக்கு என சுமார் 20 ஹெக்டர் பரப்பளவு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரு புனே தேசிய நெடுஞ்சாலையில் புத்ரமனஹட்டியில் அமைந்துள்ள மிருகக்காட்சி சாலையை மேம்படுத்துவதற்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் சபாரி பகுதியை தயார் செய்துள்ளனர். தொடர்ந்து பார்வையாளர்களை போல ஊழியர்களும் சபாரியை உற்சாகமாக எதிர்பார்த்துள்ளனர். மிருகக்காட்சி சாலையை நிர்வகிக்கும் ஆர்எப்ஓ ராகேஷ் கூறுகையில், புலிகளுக்கு உணவளிக்கும் பகுதி சபாரி தளத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் சபாரிக்கு ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஒரு பஸ்ஸில் அந்த வழியாக அழைத்துச்செல்லப்படுவார்கள். மெதுவாக செல்லும் வாகனத்தில் பார்வையாளர்கள் இறங்கவோ, கை கால்களை வெளியில் நீட்டவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மிருககாட்சி சாலைக்கு குள்ளநரி, சிறுத்தை போன்ற பிற விலங்குகளும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பணிகளை மேற்கொள்ள ரூ.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Stories: