பூட்டிய வீட்டில் திருட்டு

தங்கவயல்: தங்கவயல் பி.இ.எம்.எல். நகரில் வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வீட்டில் இருந்து ஒன்பது லட்சத்து ஒன்பது ஆயிரம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்றுள்ளனர். தங்கவயல் பி.இ.எம்.எல்‌ நகர் புலியேந்திரா லே-அவுட்டை சேர்ந்தவர் குமார் தன் வீட்டை பூட்டி கொண்டு பெங்களூர் சென்றிருந்தார். இரண்டு நாள் கழித்து அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, உள்ளே சென்று பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது குறித்து பி.இ.எம்.எல்.நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>