நடிகை பலாத்கார வழக்கை விசாரிக்க மேலும் 6 மாதம் அவகாசம் தேவை: உச்ச நீதிமன்றத்தில் மனு

திருவனந்தபுரம்:  மலையாள  சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இரவில்  காரில் திருச்சூரில் இருந்து கொச்சி செல்லும் வழியில் ஒரு கும்பலால்  கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது  முன்னாள் டிரைவர் பல்சர் சுனில் என்பவர் உட்பட 7 ேபர் கைது செய்யப்பட்டனர். அவரிடம்  போலீசார் விசாரித்தபோது, பிரபல நடிகர் திலீப்தான் இதற்கான சதித்திட்டம்  தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து திலீப்பை போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர். 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் நடிகர் திலீப் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகையின்  கோரிக்கைக்கு ஏற்ப, பெண் நீதிபதி ஹனி வர்க்கீஸ் தலைமையில் கடந்த 2019ம்  ஆண்டு தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடந்து வருகிறது.

6 மாதங்களுக்குள்  விசாரணையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. ஆனால்  கொரோனா பரவல் ஏற்பட்டதால் விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம்  கோரப்பட்டது. இந்த நிலையில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக்ேகாரி,  பாதிக்கப்பட்ட நடிகை மற்றும் போலீஸ் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பல காரணங்களால் விசாரணையை முடிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த  நிலையில் நடிகை பலாத்கார வழக்கை முடிக்க, மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோரி  விசாரணை நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த  மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

Related Stories:

>