உள்ஒதுக்கீட்டில் 5% மருத்துவர் சமூகத்திற்கு வழங்க கோரி கரூரில் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் உண்ணாவிரதம்

கரூர் : தமிழ்நாடு மருத்துவர் நலச் சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றின் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். நகர தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குப்புசாமி வரவேற்றார். இதில், அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மாவட்ட அமைப்பாளர் முத்து, நகர அமைப்பாளர் அன்புவேல் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினர்.

உள்ஒதுக்கீட்டில் 5 சதவீதம் மருத்துவர் சமூகத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

Related Stories: