வேட்புமனுத்தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்!: சுனில் அரோரா

டெல்லி: வேட்புமனுத் தாக்கலின் போது 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று சுனில் அரோரா தெரிவித்துள்ளார். வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட பணிகளின் போது கூட்டம் கூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கலுக்கு வர அதிகபட்சம் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்படும். வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>