திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!

டெல்லி :  திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் தேசிய தலைவர்கள் தமிழ் மொழி, அதன் பழமை, தமிழ் மொழி இலக்கியம் குறித்து பேசி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி தமிழகம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது தமிழ் குறித்து பேசிவிட்டு போவது வழக்கமான ஒன்றாகும்.

அதுமட்டுமல்லாது, பிரதமர் நரேந்திர மோடி, பல சமயங்களில் திருக்குறளை உதாரணமாக பயன்படுத்தி, அரசியல் விழாக்களில் பேசி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் கவனமும் தற்போது திருக்குறளின் பக்கம் திரும்பியுள்ளது.

இதனை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவர் திருக்குறளை வாசித்து வருவதாகவும், திருக்குறளின் கருத்தாழம் தன்னை வியப்பில் ஆழ்த்தியதாகவும் அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், திருக்குறளை படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>