அம்பானி வீடு அருகே வெடிகுண்டு வாகனம்

மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே ஜெலட்டின் குச்சிகள் நிரம்பிய கார் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பானி வீட்டை தகர்க்க நடந்த சதியா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மும்பை கும்பாலா ஹில், ஆல்டாமவுண்ட் சாலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லம் உள்ளது. ண்டிலியா ஹவுஸ் என்ற இந்த இல்லத்தில் இருந்து சிறிது தொலைவில் கார் ஒன்று கேட்பாரற்ற நிலையில் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டிருந்தது.  

வாகனத்தை எடுக்க யாரும் வராததால், அம்பானி வீட்டில் பாதுகாப்புக்கு இருந்த காவலாளிகள், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  தகவலறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், உயர் அதிகாரிகள் உடனே விரைந்து வந்தனர். அங்கு அனாதையாக நின்றிருந்த பச்சை நிற ஸ்கார்ப்பியோ வாகனத்தை சோதனையிட்டனர். அதில் இருந்து சுமார் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தீவிர சோதனை நடந்தது. இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: