மோடியே திரும்பி போ.. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்

டெல்லி : #GoBackModi என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்தில் புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று 12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார் மோடி.நெய்வேலியில் புதிய அனல் மின் திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

பொதுவாக பிரதமர் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங் வது வழக்கம். அதேபோல் இந்த முறையும் நேற்று மதியத்தில் இருந்தே #GoBackModi டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் #GoBackModi ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.  பல்வேறு தரப்பினரும் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பிரதமரை வரவேற்கும் விதமாக #TNWelcomesModi என்ற ஹேஸ்டேகும் டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. தமிழகத்துக்கு பிரதமரை வரவேற்று பாஜகவினர் கருத்து கூறி வருகின்றனர். இதனிடையே வாங்க மோடி ... வணக்கங்க மோடி.. என பிரதமர் மோடியை வரவேற்று பாஜக பாடல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>