விரைவில் சட்டமன்ற தேர்தல் சிஏஏ, சபரிமலை போராட்ட வழக்குகள் வாபஸ்: கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

திருவனந்தபுரம்: கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்பு சபரிமலையில் இளம்பெண்களையும் அனுமதிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாஜ, ஆர்எஸ்எஸ், நாயர் சமுதாய அமைப்பான என்எஸ்எஸ், இந்து ஐக்கிய வேதி உள்பட இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.  ேகரளாவில் பல இடங்களில் இந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. இதில்  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது  வழக்குகள் பதிவு  செய்யப்பட்டன. இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என எனஎஸ்எஸ் சமீபத்தில் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் நேற்று  முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் சபரிமலை  போராட்டம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற முடிவு ெசய்யப்பட்டது. மேலும்  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் தொடர்பாக பதிவு  ெசய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் கடுமையான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ்  பெறப்பட மாட்டாது.

Related Stories:

>