மச்சி கொல்லி - பேபி நகரில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டுமாடு-வனத்திற்குள் விரட்ட கோரிக்கை

கூடலூர் : கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி மற்றும் பேபி நகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களிலும் காட்டுமாடு ஒன்று சுற்றித் திரிகிறது. இங்குள்ள விவசாயிகளின் காப்பி, தேயிலை மற்றும் வாழைத் தோட்டங்களுக்குள் நடமாடும் இந்த காட்டு மாடு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. நடைபாதை மற்றும் சாலையிலும் இந்த காட்டுமாடு நடமாடுவதால் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் பயமின்றி வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரவில் இருசக்கர வாகனங்களில் அத்தியாவசிய தேவைக்கு கூட இப்பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக குன்னூரில் காட்டுமாடு தாக்கி ஒருவர் பலியான நிலையில், உயிர்பலி ஏற்படும் முன்பாக வனத்துறையினர் காட்டுமாட்டினை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: