ஆதார், ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்: மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழக மின்வாரிய ஒப்பந்தத்தொழிலாளர்கள் கூறியதாவது: மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இயற்கை பேரிடர் காலங்களான தானே, வர்தா, ஓகி, கஜா, நிவர் போன்ற புயல் காலங்களில் சிறப்பாக பணியாற்றியிருக்கிறோம். ரூ.380 தினசரி கூலியாக வழங்க வேண்டும். நிரந்தரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியம் கூட கொடுக்க மறுக்கின்ற தமிழக அரசினால் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் மனம் உடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால் எங்களது குடும்பத்துடன் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அனைத்து குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்துகிறோம். சென்னையில் நாளை (இன்று) காலை 10 மணிக்கு மாநில தேர்தல் ஆணையத்தில் குடியுரிமை ஒப்படைக்கும் போராட்டம் நடக்கிறது. இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் குடியுரிமை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துகிறோம். கடைசியாக மாநிலத்தை விட்டு வெளியேறும் போராட்டம் நடத்துவோம்.

Related Stories: