நெமிலியில் 3 மாதங்களாக குவித்திருக்கும் நெல் வீணாகும் அவலம்: நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விற்பனை தொடங்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

நெமிலி: நெமிலி அருகே ேநரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். இவை வீணாவதை தடுக்க விரைந்து நெல்கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஒன்றியம் அசநெல்லிக்குப்பத்தில்  நேரடிநெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை மூட்டைகளில் கட்டி டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 23ம் தேதி நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யும் பணி முடிவடைந்தது. இதையடுத்து நெல் கொள்முதல் செய்வது தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கும் ேமலாக தங்கள் நிலத்தில் விளைந்த நெல்லை விவசாயிகள் கொண்டு வந்து நெல்கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்துள்ளனர். இவை போதிய பாதுகாப்பின்றி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மழை, வெயிலில் வீணாகும் அவலம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து கொள்முதல் நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை கொள் முதல் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: