செம்பட்டி பகுதியில் மொச்சை அறுவடை மும்முரம்

சின்னாளபட்டி : செம்பட்டி அருகே வீரசிக்கம்பட்டி, கோடாங்கிபட்டி, போடிகாமன்வாடி பகுதிகளில் விவசாயிகள், தென்னை மரத்தின் ஊடு பயிராக சிவப்பு மொச்சை பயிரிட்டிருந்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் இருந்து விதையை வாங்கி பயிரிட்ட மொச்சை நல்ல விளைச்சல் அடைந்துள்ளது. இளஞ்சிவப்பு கலரில் இருக்கும் மொச்சை பயிரை பொதுமக்கள் விரும்பி உண்ணுவர். தற்போது இவற்றை அறுவடை செய்து, தரம் பிரித்து விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு அனுப்பி வருகின்றனர். ஒரு கிலோ உலர்ந்த மொச்சை ரூ.50 வரை விற்கப்படுகிறது.இதுகுறித்து வீரசிக்கம்பட்டியை சேர்ந்த சவடமுத்து கூறுகையில், ‘ஆண்டிபட்டியில் இருந்து மொச்சை விதையை வாங்கி பயிரிட்டிருந்தோம். அவை தற்போது நன்கு வளர்ந்து காய்த்து குலுங்கியதால் அவற்றை பறித்து மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். போதிய விலை கிடைப்பதால் மகிழ்ச்சியே’ என்றார்….

The post செம்பட்டி பகுதியில் மொச்சை அறுவடை மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: