இரட்டை ரயில் பாதை பணிகள் நெல்லை எக்ஸ்பிரஸ் 5 நாட்கள் மதுரை வரை மட்டுமே இயங்கும்

நெல்லை:  நெல்லை - கங்கை கொண்டான் மற்றும் கோவில்பட்டி - கடம்பூர் ரயில் பாதை பிரிவுகளில் இரட்டை ரயில் பாதை இணைப்புப் பணிகள் நடப்பதால், ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வண்டி எண் 02627/02628 திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் பிப்ரவரி 19 முதல் பிப்ரவரி 28 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சென்னையிலிருந்து புறப்படும் வண்டி எண் 02631 சென்னை - நெல்லை நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மதுரை - நெல்லை ரயில் நிலையங்களுக்கு இடையே பிப்.23 முதல் பிப்.27 வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பிப்.24 முதல் பிப்.28 வரை நெல்லையில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 02632 நெல்லை - சென்னை நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் நெல்லை - மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையில் இருந்து இயக்கப்படும். பிப்.24, 25, 26, 28 ஆகிய நாட்களில் வண்டி எண் 06127 சென்னை எழும்பூர் குருவாயூர் சிறப்பு ரயில் அதன் வழக்கமான பாதையான விருதுநகர், வாஞ்சி மணியாச்சி நெல்லைக்கு பதிலாக விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், நெல்லை பாதையில் இயக்கப்படும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: