சென்னை: வணிக சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை அனைத்து உணவகங்களுக்கும் தமிழ்நாடு அரசு மின்சாரக் கட்டணத்தில் சலுகை அறிவித்ததற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல ஹோட்டல்கள் மின் அடுப்பிற்கு மாறியுள்ள நிலையில், கூடுதல் நுகர்வுக்கு யூனிட்டிற்கு ரூ.2 சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
