அதிக விலைக்கு சிலிண்டர் விற்ற காஸ் ஏஜென்சிக்கு சீல்: திருப்பூரில் அதிகாரிகள் அதிரடி

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் ரோடு, வீரபாண்டி அடுத்த வாய்க்கால் மேடு பஸ் ஸ்டாப்பில் உள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் அதிக விலைக்கு வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்கப்படுவதாகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும் மாவட்ட வழங்கல் துறைக்கு புகார் வந்தது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் நேற்று சோதனை நடத்த சென்றார். அப்போது உரிமையாளர் நீண்ட நேரமாக ஏஜென்சிக்கு வராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

மேலும், அதிகாரிகள் போன் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக கடைக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர். அப்போதும் தாமதப்படுத்தியுள்ளார். சந்தேகமடைந்த அதிகாரிகள், காஸ் ஏஜென்சிக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து சிலிண்டர்களை பதுக்கினாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் எச்சரித்துள்ளார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: