4 ஆயிரம் கோடியில் திட்டம் பிரம்மபுத்ரா நதியின் மீது நாட்டின் நீளமான பாலம்: அடிக்கல் நாட்டினார் மோடி

மஜுலி: சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள அசாமில், பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். நேற்றும் அவர், டெல்லியில் இருந்து காணொலி மூலமாக, பிரம்மபுத்ரா நதியின் மீது 4 ஆயிரம் கோடி செலவில் 19 கிமீ தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள இந்தியாவின் மிக நீளமான பாலத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார். விழாவில் பேசிய அவர், ‘‘ முந்தைய காங்கிரஸ் அரசு, அசாமின் வளர்ச்சியைக் கண்டுகொள்ளவில்லை. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து வடகிழக்குப் பகுதிகளின் வளர்ச்சியில் யாரும் ஈடுபாடு காட்டவில்லை. இந்த நிலைமையை, வாஜ்பாயின் அரசாங்கம்தான் முதன்முதலில் மாற்றியது. அதன் பலனாக இன்று பாஜ ஆட்சி அசாமில் அமைந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைத்து வருகிறது,’’ என்றார்.

Related Stories: