குமரி முழுவதும் கள்ளச்சந்தையில் மது, புகையிலை விற்பனை தீவிரம்: 22 பேர் அதிரடி கைது

நாகர்கோவில்: அருமனை பகுதியில் மது விற்ற மஞ்சலாமூடை சேர்ந்த ரவிவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நேசமணிநகர் போலீசார் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜெயசேகர், சின்னவண்ணன்விளை பகுதியை சேர்ந்த முருகன் (44) ஆகியோரை மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி போலீசார் கொட்டாரம் பகுதியை சேர்ந்த தினேஷ் தாவீதையும் (26), ஆசாரிபள்ளம் போலீசார் தலக்குளத்தை சேர்ந்த பவுல்ராஜையும்(62) மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜாக்கமங்கலம் போலீசார் அழிக்கால் பகுதியை சேர்ந்த தோபியாஸ் (70), கணபதிபுரத்தை சேர்ந்த நாகப்பன் ஆகியோரை மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈத்தாமொழி போலீசார் கருங்கல் பகுதியை சேர்ந்த குமாரையும் (32), சுசீந்திரம் போலீசார் நல்லூரை சேர்ந்த ராதாகிருஷ்ணனையும் மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வடசேரி போலீசார் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்த நாகராஜன், கோட்டார் போலீசார் ஊட்டுவாழ்மடத்தை சேர்ந்த முருகன், பூதப்பாண்டி போலீசார் பிரான்சிஸ், களியக்காவிளை போலீசார் சசி ஆகியோரை மது விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் கடைவில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்றதாக வடசேரி போலீசார் பள்ளிவிளையை சேர்ந்த சேகரையும், மார்த்தாண்டம் போலீசார் ஷாஜகானையும், பூதப்பாண்டி போலீசார் கேசவன்புதூரை சேர்ந்த கணேசனையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 55 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

 ஆரல்வாய்மொழி போலீசார் வெள்ளமடத்தை சேர்ந்த செல்வகுமார், மோகன், சகாயநகரை சேர்ந்த நசீம்அபுபக்கர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 211 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர். சுசீந்திரம் போலீசார் பணிக்கன்குடியிருப்பை சேர்ந்த தங்கசாமி, தென்தாமரைகுளம் போலீசார் முருகேசனையும், கன்னியாகுமரி போலீசார் பரமேஸ்வரனையும் புகையிலை விற்றதாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 57 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்தனர்.

Related Stories: